/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாழை குலைகளை அறுக்க கத்தியுடன் வந்த பெண்கள்
/
வாழை குலைகளை அறுக்க கத்தியுடன் வந்த பெண்கள்
ADDED : பிப் 22, 2025 07:27 AM

கடலுார்; முதல்வர் பங்கேற்ற விழாவில் கட்டப்பட்டிருந்த வாழை, இளநீர் தோரணங்களை பெண்கள் கத்தியால் வெட்டி எடுத்துச்சென்றனர்.
முதல்வர் பங்கேற்கும் விழாவையொட்டி கடலுார் மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் செய்வதால் அவரது இலாகா தொடர்பான வாழை, கரும்பு, பலா, இளநீர், அன்னாச்சிப்பழம் ஆகியவை பீச் ரோட்டில் இருந்து மைதானத்தின் மேடை வரை 100 மீட்டர் அளவுக்கு கட்டப்பட்டிருந்தன. விழா முடியும் வரை வாழை மரத்தின் மறைவில் ஏராளமான பெண்கள், ஆண்கள் கையில் கத்தியுடன் நின்றிருந்தனர்.
விழா முடிந்து முதல்வர் புறப்பட்டு சென்றவுடன் மின்னல் வேகத்தில் வெளியே வந்த பெண்கள் வாழை மரத்தின் குலையை கத்தியால் அறுத்து எடுத்தனர். அதேப்போல இளநீர், அன்னச்சிப்பழம் போன்றவற்றையும் பெண்கள் எடுத்துச்சென்றதை போலீசார் வேடிக்கை பார்த்தனர்.

