/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுரேந்திரா மருத்துவமனையில் மகளிர் தின விழா
/
சுரேந்திரா மருத்துவமனையில் மகளிர் தின விழா
ADDED : மார் 10, 2025 12:26 AM

கடலுார்; சுரேந்திரா மருத்துவமனையில் மகளிர் தின விழா நடந்தது.
விழாவில் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ரமணபிரியா வரவேற்றார். சுரேந்திரா மருத்துவமனையின் துணை நிர்வாக இயக்குனர் தேன்மொழி தலைமை தாங்கினார். மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் அமிர்தலட்சுமி, லைப் செல் உரிமையாளர் ரம்யா மற்றும் உடற்கூறு மருத்துவர் சாய் ஈஸ்வரி முன்னிலை வகித்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிவசெல்வி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ரமணபிரியா பேசும்போது, கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் ஹெச்.பி.வி., என்றால் என்ன? அதற்கு தடுப்பூசி ஏன் முக்கியமானது ? யாருக்கு ஹெச்.பி.வி., தடுப்பூசி தேவை? அந்த தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது? போன்ற பயனுள்ள தகவலையும் விழிப்புணர்வையும் வழங்கினார்.
80-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.