/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் தினம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
மகளிர் தினம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மார் 09, 2025 05:08 AM

நெய்வேலி : நெய்வேலியில் தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, தி.மு.க.,வினர் மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்பகுதிகளில் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து பெண்களுக்கும் எம்.எல்.ஏ., இனிப்பு வழங்கினார்.
வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட பி.டி.ஆர்., நகரில் இருந்து ஜெயப்பிரியா நகர் வரையிலான சாலைக்கு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டசபை தொகுதி பார்வையாளர் இளையராஜா, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், முன்னாள் வடக்குத்து ஊராட்சி துணைத் தலைவர் சடையப்பன், தி.மு.க., நிர்வாகிகள் வாஜித், சுப்பிரமணியன், நடராஜன், மணிகண்டன், கோபால், ஆபிரகாம், அந்தோணி தாஸ், இளங்கோவன், வடக்குத்து பணி மேற்பார்வையாளர் குணசேகரன், ஊராட்சி செயலர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.