ADDED : ஜூன் 26, 2026 11:09 PM
காட்டுமன்னார்கோவில்: கீழ்தவர்த்தாம்பட்டில் 108 ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழ்தவர்த்தாம்பட்டைச் சேர்ந்த அபிமன்யு மகன்கள் பிரபுகுமார், 42; சுந்தர் 30; கூலித்தொழிலாளிகள். இருவருக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் வீட்டுமனை பிரச்னை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தம்பி சுந்தர், அருகில் கிடந்த கட்டையால் அண்ணன் பிரபுகுமாரை தாக்கினார்.
இதில் பிரபுகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் பிரபுகுமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ்சை வரவழைத்தனர். 108 ஆம்புலன்ஸில் பிரபுகுமாரை ஏற்றும் பொழுது, சுந்தர் ஆம்புலன்சில் பிரபுகுமாரை ஏற்ற விடாமல் தடுத்த, ஆம்புலன்ஸ் இடது பக்க ஜன்னல் கதவு கண்ணாடியை உடைத்தார்.
இது குறித்து பிரபுகுமார் கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி இன்ஸ்பெக்டர் இளவரசன், 108 ஆம்புலன்ஸ் கண்ணாடியை அடித்து உடைத்த சுந்தர் 30; மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
