ADDED : ஜூலை 25, 2024 06:09 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே முந்திரி மரத்தில் இருந்து கிழே விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுார் பெரியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 54; விவசாய கூலி தொழிலாளி; இவர் தனது மனைவி, மகனுடன் கடந்த 9 ம்தேதி செம்மங்குப்பத்தில் உள்ள வடிவேல் என்பவரது முந்திரிதோப்பில் முந்திரி பறிக்க சென்றனர்.
அங்கு, முந்திரி மரத்தில் ஏறிய போது வெங்கடேசன் தவறி கிழே விழுந்ததில் தலை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை நெய்வேலி என்.எல்.சி.மருத்துவமனையில் சேர்த்து பின் மேல்சிகிச்சைக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார்.
முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
