தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி


ADDED : ஆக 24, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு கட்டட தொழிலாளி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிதம்பரம் -கிள்ளை இடையே கந்தமங்கலம் என்ற இடத்தில் ரயில் பாதையில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, இறந்து கிடந்த நபர், கடலூர் அடுத்துள்ள பூச்சிமேடு, துல்லாமேட்டு தெருவை சேர்ந்த பாலகுரு 40: என்பது தெரிந்தது. கட்டட வேலை செய்துவந்த அவர், சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டியில் குடும்பத்துடன் வசித்து வருவதும், இவருக்கு மனைவி மற்றும் 5 வயது மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ரயில் பாதையை கடக்கும்போது இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us