ADDED : மார் 28, 2024 11:11 PM
அ நிறம் | அளவு
கடலுார்: தந்தை கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் அடுத்த வடக்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் பாரதி, 27; கூலித் தொழிலாளி. பன்னீர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அவருக்கு பாரதி எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்தார்.
இதனை பன்னீர் கண்டித்ததால் மனமுடைந்த பாரதி கடந்த 23ம் தேதி நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
