நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் துறைமுகம், சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்,60; மீன்பிடி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வீட்டில் திடீரென பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தனர்.
உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சந்திரசேகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

