ADDED : ஏப் 29, 2024 04:13 AM
அ நிறம் | அளவு
புவனகிரி : புவனகிரி அருகே வயிற்று வலியால் கூலித் தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அருகே பூதாவராயன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் மச்சவல்லவன், 55; விவசாயக் கூலி தொழிலாளி. அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், விரக்தியுடைந்த அவர், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
