ADDED : மே 25, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கூலித்தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் துரை மகன் அரவிந்த்ராஜ், 21; கூலித் தொழிலாளி. இவர், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தினார். மது குடிக்க பணம் கேட்டு தனது தாய் விஜயாவிடம் தொந்தரவு செய்தார். நேற்று முன்தினம் பணம் இல்லை என விஜயா கூறினார். இதனால் மனமுடைந்த அரவிந்த்ராஜ் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
