ADDED : ஜூலை 25, 2026 10:12 PM
அ நிறம் | அளவு
கடலுார்: ஆட்டோ டீசல் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணத்தைச் சேர்ந்தவர் குரு,49; இவர், கடலுார், சாவடி புறவழிச்சாலையில் ஆட்டோ டீசல் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று காலை அவர், அதே ஒர்க்ஷாப்பில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், மகனிடம் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக குரு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
