ADDED : ஜூன் 05, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: சாலையோரம் மரங்கள் நடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மோவூர் ஊராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சாலையோரம் மரம் நடும் நிகழ்ச்சி, மோவூர் கலுங்கு பஸ் நிறுத்தம் அருகே நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை தனி அலுவலர் சீதாபதி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் நாவல், மாங்கனி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ரக மரங்களை நட்டு வைத்தனர். பின்னர் மரங்களை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் அனிப்கான், ஊராட்சி செயலாளர் நாராயணசாமி மற்றும் ஊராட்சி பணியாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
