/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஈஷா யோகா சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்
/
ஈஷா யோகா சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்
ADDED : ஜூன் 15, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: ஈஷா யோகா மையம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
குள்ளஞ்சாவடி அடுத்த சின்னக்காட்டு சாகை ஈஷா நாற்றங்கால் பண்ணையில் நடந்த விழாவில், எஸ்.பி.,ராஜாராம் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். பின், பண்ணை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில், கடலுார் ஸ்ரீ வள்ளி விலாஸ் பங்குதாரர் பாலு, சமூக பணியாளர் வனிதா, கோவை ஈஷா யோகா மையம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்க நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.