ADDED : ஜூன் 06, 2026 07:54 PM
மந்தாரக்குப்பம், ஜூலை 7–
நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினவிழா நடந்தது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வத் தொண்டரான பாரதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது, ‘‘, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம், இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடுவதின் முக்கியத்துவம், எதிர்கால தலைமுறைக்காக பசுமையான உலகை உருவாக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கூறினார்.
விழாவில் பங்கேற்ற மாணவர்கள் பள்ளி வளாகங்களைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டு , “இன்றே இயற்கையைப் பேணுவோம்; நாளைய உலகை வளப்படுத்துவோம்” என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், வடக்குத்து பள்ளி செயலாளர் சிந்து, முதன்மை நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம், பள்ளியின் சி.பி .எஸ்.இ பள்ளி முதல்வர் சிதம்பரி, மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரியா, நிர்வாக அலுவலர் சரண்யா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
