ADDED : ஜூன் 05, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம், ஜூன் 6–
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருச்சி பாரதிதாசன் பல்கலை., பெண்ணாடம் தொலைக்கல்வி மையம் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். குழந்தைகள் நல டாக்டர் திருமால், பேராசிரியர் சண்முகம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கண்ணன் ஆகியோர் உலக சுற்றுச்சூழல் தினம், அதன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
மைய பணியாளர்கள் பரமேஸ்வரி, சங்கரி, சுகுணா, லட்சுமி, ஹரிப்ரியா உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, சுற்றுச்சூழல் குறித்து பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக, தொலைக்கல்வி மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மைய மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
