ADDED : ஜூன் 24, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : சர்வதேச யோகா தினத்தையொட்டி ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தினர்.
பள்ளி மாணவ மாணவிகள் பூவராகசுவாமி கோவில் முன்பு யோகாசனம் செய்து காண்பித்து அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர். பள்ளி தாளாளர் பார்த்தசாரதி, நிர்வாக இயக்குனர் சங்கீதா, முதல்வர் பினேஷ்ஜான் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.