ADDED : ஜூன் 22, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் வரவேற்றார். விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அறிவுத்திருக்கோவில் மனவளக்கலை மன்ற பேராசிரியர்கள் சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மன வலிமை, உடல் ஆரோக்கியம் பெறும் வகையிலான யோகா பயிற்சிகளை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் செய்தனர். ஒருங்கிணைப்பாளர் வில்விஜயன் நன்றி கூறினார்.