/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்
/
அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 04, 2024 12:49 AM
சிதம்பரம்,: காட்டுமன்னார்கோவில்அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கல்லுாரி முதல்வர் மீனா செய்தி குறிப்பு;
காட்டுமன்னார்கோவில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர்வதற்கு இன்று 4 ம் தேதி, நாளை (5ம் தேதி) இரு நாட்கள், ஏற்கனவே, கல்லுாரியில் சேர்வதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காத, மாணவர்கள், கல்லூரியில் செயல்படும் உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்த மாணவர்களை கல்லுாரியில் உள்ள 192 காலி இடங்களில், உரிய வழிமுறைகளை பின்பற்றி வரும் 8 ம் தேதி முதல் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் பங்கேற்கலாம்.
கல்லுாரிகள் செயல்படும் உதவி மையத்தின், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் தேவையான ஆவணங்களை கொண்டு வந்து, பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.அதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மற்றும் ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மாற்றுச்சான்றிதழ், 3 பாஸ்போர்ட் போட்டோஆகியன, அசல் மற்றும் நகல் கொண்டு வரவேண்டும்.
கல்லுாரியில் பி.ஏ., தமிழ்,பி.ஏ.,ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், மற்றும் பி.காம் பாடங்கள் உள்ளன.