/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
/
சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 31, 2024 02:47 AM
கடலுார்: கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு, உத்தரவுபடி, கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிர் பாதுகாப்பு முகமை மைய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வழக்கறிஞர்கள் பின்வரும் பணிகளான தலைமை சட்ட உதவி பாதுகாப்பு அலுவலர் - 1 பதவி, தலைமை துணை சட்ட உதவி பாதுகாப்பு அலுவலர் - 2 பதவி, உதவி சட்ட பாதுகாப்பு அலுவலர் - 4 பதவி ஆகிய பதவிகளுக்கு பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.
மேலும் அதே அலுவலகத்தில், உதவியாளர் - 2 பதவி மற்றும் அலுவலக உதவியாளர் - 2 பதவி ஆகிய பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை கடலுார் மாவட்ட நீதிமன்ற இணையதள முகவரியில் (https://districts.ecourts.gov.in/cuddalore) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்., 13ம் தேதி மாலை 5.00 மணிக்குள் தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், கடலுார் என்ற முகவரிக்கு நேரடியகாவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள இணைய வழி இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்திலும் தவறாமல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இப்பதவிகளுக்கான நேர்காணல் செப்., 21ம் தேதி கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காலை 11.00 மணியளவில் நடக்கிறது.
நேர்காணலுக்கு விண்ணப்பங்களில் இணைத்துள்ள ஆணவங்களின் அசல் ஆவணங்களுடன் காலை 9:30 மணியளவில் வர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.