/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'டென்சிங் நார்கே' விருதுக்கு 27க்குள் விண்ணப்பிக்கலாம்
/
'டென்சிங் நார்கே' விருதுக்கு 27க்குள் விண்ணப்பிக்கலாம்
'டென்சிங் நார்கே' விருதுக்கு 27க்குள் விண்ணப்பிக்கலாம்
'டென்சிங் நார்கே' விருதுக்கு 27க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 24, 2024 05:28 AM
கடலுார்: 'டென்சிங் நார்கே' தேசிய சாகச விருதுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் இளைஞர் நலன் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், மாநிலங்களில் நிலம், கடல் மற்றும் ஆகாயம் ஆகியவையில் பாராட்டத்தக்க வகையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் வகையில்'டென்சிங் நார்கே' தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது.
2023ம் ஆண்டிற்கான விருதுக்கு தகுதியுடைய கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த தகவல்கள் https://awards.gov.in/ என்ற இணைய தளத்தில் உள்ளது. தகுதி உடையவர்கள், வரும் 27ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அதன் விபரத்தின் நகலினை கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.