/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சிகளில் தொழிற்சாலை துவங்க விண்ணப்பிக்கலாம்
/
ஊராட்சிகளில் தொழிற்சாலை துவங்க விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 07, 2025 06:51 AM
கடலுார் : கிராம ஊராட்சிகளில் புதியதாக தொழிற்சாலை துவங்க, கலெக்டரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, கிராம ஊராட்சிகளில் புதியதாக தொழிற்சாலை அமைக்க சிறு மற்றும் குறு நிறுவனங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாகவும், நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் மூலமாகவும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.