/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எந்த நேரத்திலும் என்னை அணுகலாம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் பேட்டி
/
எந்த நேரத்திலும் என்னை அணுகலாம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் பேட்டி
எந்த நேரத்திலும் என்னை அணுகலாம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் பேட்டி
எந்த நேரத்திலும் என்னை அணுகலாம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் பேட்டி
ADDED : ஏப் 05, 2024 05:06 AM

சிதம்பரம்: 'சிதம்பரத்தில் அலுவலகம் திறந்து வாரம் ஒரு நாள் மக்கள் குறை கேட்டு, லோக்சபாவில் பேசி தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்' என சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் கூறினார்..
அவரது பேட்டி:
சிதம்பரத்தில், போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற முன்னாள் முதல்வர் பழனிசாமி வாய்ப்பு கொடுத்துள்ளார்.
பிரசாரத்தின்போது மக்களின் எழுச்சியும் எதிர்பார்ப்பும், அ.தி.மு.க.,விற்கு பெரும் வாய்ப்பு உள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
இத்தொகுதியில் இருந்த எம்.பி., மீது மக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். தொகுதி பக்கமே தலை காட்டாமலும், மக்கள் பணி செய்யாததால் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதுவே எங்களுக்கு சாதமாக பார்க்கப்படுகிறது.
எனவே, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். சிதம்பரத்தில் எம்.பி., அலுவலகம் அமைத்து வாரம் ஒரு நாள் மக்கள் குறை கேட்டு, லோக்சபாவில் பேசி தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
என்னை, அணுகுவதும், சந்திப்பதும் மிகவும் சுலபம். எனவே, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் கூறினார்.

