/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது
/
உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது
ADDED : ஆக 29, 2024 07:00 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் நகர போலீசார் நேற்று முன்தினம் இரவு புவனகிரி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த சிதம்பரம் வண்டிகேட், நஞ்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் வெங்கடேசன்,23; என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அழிஞ்சிமேடு பாசிமுத்தான் ஓடை அருகே உள்ள முனீஸ்வரன் கோவில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணம் ரூ.3,600யை திருடிக் கொண்டு செல்வது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர். மேலும், அவர் உண்டியலில் திருடிய பணத்தை பறிமுதல் செய்தனர்.