ADDED : மே 03, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில், - பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சியில் உள்ள, தனது பாட்டி வீட்டிற்கு, பள்ளி விடுமுறை விடப்பட்டதால், 18 வயது இளம்பெண் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை, அப்பெண் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரவிராஜ், 23; குடி போதையில், வீட்டிற்குள் சென்று, துாங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம், தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். உடன் அப்பெண் சத்தம் போட்டதால், அருகில் துாங்கிக்கொண்டிருந்தவர்கள் எழுந்து வரவே அங்கிருந்து தப்பி சென்றார். பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் பேரில், குமராட்சி சப் இஸ்பெக்டர் சந்திரா வழக்குப் பதிவு செய்து ரவிராஜை கைது செய்தனர்.