ADDED : மார் 15, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவிலில், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டுமன்னார்கோவில் கக்கன் நகரை சேர்ந்த நாகலிங்கம் மகன் கோகுல்நாத், 23; என்பவர் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
போலீசார் அவரை கைது செய்து, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.