/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
/
என்.எல்.சி., ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
ADDED : மே 13, 2024 04:49 AM

நெய்வேலி: என்.எல்.சி., ஊழியர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம், 25ஐ சேர்ந்தவர் பாஸ்கர்; என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் பணிபுரிகிறார். இவரது வீட்டில் கடந்த நவம்பரில், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள எல்.இ.டி., டிவி., பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின.
புகாரின் பேரில், நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார், வட்டம் - 4, மயானம் செல்லும் சாலையில் நேற்று ரோந்து சென்றனர்.
அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோடினார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேசிங்கு மகன் சிவா, 22, என்பதும் என்.எல்.சி., ஊழியர் பாஸ்கர் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த டி.வி, மற்றும் பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.