ADDED : மே 02, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பண்ணப்பட்டு கிராமத்தில் வீட்டு கொட்டகையில் கட்டியிருந்த ஆடுகளை திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பண்ணப்பட்டு கிராமத்தில், வேல்முருகன் என்பவரது ஆட்டுக்கொட்டகையில், நேற்று முன்தினம் இரவு, ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, அங்கு மர்ம நபர் ஆடுகளை திருடியது தெரியவந்தது. கிராம மக்கள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து, ஒரத்துார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கீரப்பாளையம் நரிக்குறவர் தெருவை சேர்ந்த ஜீவா, 33; என்பவர் ஆடு திருடியது தெரிவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து ஜீவாவை கைது செய்தனர்.