ADDED : ஜூலை 23, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: காதலிக்க மறுத்த கல்லுாரி மாணவிக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த இருசாளக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் வாசன், 20; இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த கல்லுாரி மணவி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மாணவி மறுத்ததால், அவரை ஆபாசமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வாசனை கைது செய்தனர்.
