/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிற்கு கொலைமிரட்டல் வாலிபர் கைது
/
பெண்ணிற்கு கொலைமிரட்டல் வாலிபர் கைது
ADDED : ஆக 15, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெண்ணிற்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் காலனியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி சரண்யா, 24. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமு, 38, என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த சரண்யாவை, ராமு அசிங்கமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ராமுவை கைது செய்தனர்.