ADDED : மே 15, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புனகிரியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
மேல்புவனகிரி புதுத்தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மகன் பாலாஜி, 23; இவர், மீது போலீசில் பல்வேறு அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. தற்போது, பைக் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில், பாலாஜி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.