ADDED : மே 30, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கீழ்புவனகிரியை சேர்ந்த தம்பதியினர், நேற்று முன்தினம் தனது 13 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, வெளியூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றனர். இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த விஜயக்குமார்,38; என்பவர், வீட்டிற்குள் நுழைந்து, தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் கூச்சலால் அப்பகுதியினர் ஓடிவந்தனர். இதை பார்த்த விஜயக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது குறித்து அப்பகுதியினர் புவனகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த விஜயகுமாரை, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.