/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு திடலில் பலா மதிப்பு கூட்டு மையம் போராட்டத்தில் ஈடுபட இளைஞர்கள் முயற்சி

ADDED : மார் 03, 2025 07:41 AM
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் பலா மதிப்பு கூட்டு மையம் அமைக்கும் இடத்தினை மாற்றம் செய்ய வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் பட்டீஸ்வரம் அரசு இடத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளையாட்டு திடலில், பலா மதிப்புக்கூட்டு மையம் அமைக்கும் பணி நடக்கிறது.
பல ஆண்டுகள் விளையாட்டு திடலாக பயன்படுத்திய இடத்தில் பலா மதிப்பு கூட்டு மையத்தை அமைப்பதிற்கு பதில், சற்று தள்ளி அமைக்க கடந்த மாதம் அக்கிராம இளைஞர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஆனால் விளையாட்டு திடல் பகுதியிலே பணிகள் நடந்து வந்ததால், அப்பகுதி இளைஞர்கள் நேற்று காலை போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்தனர்.
தகவலறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கூடி இருந்த இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட அதிகாரிகளிடம் சென்று மனு கொடுத்து சுமூக தீர்வு ஏற்படுத்தி கொள்ள அறிவுறுத்தினர். அதனை ஏற்று இளைஞர்கள் கலைந்து சென்றனர்.