/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரிகார்டில் பைக் மோதி வாலிபர் பலி
/
பேரிகார்டில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : மே 26, 2024 05:52 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த அகரபுத்துாரில் பேரி கார்டில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் இறந்தார்.
காட்டுமன்னாகோவில், உடையார்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வசந்தராஜ், 30; ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த 22ம் தேதி பணி முடிந்து இரவு 8:00 மணியளவில் ேஹாண்டா ைஷன் பைக்கில் வீடு திரும்பினார். கும்பகோணம் சாலையில் அகரபுத்துார் அருகே வந்தபோது, சாலையில் வைத்திருந்த பேரி கார்டில் மோதி விபத்துக்குள்ளானதில், தலையில் பலத்த காயமடைந்தார்.
உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வசந்தராஜ் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
புகாரின்பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.