தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 09, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: வாலிபர் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

குறிஞ்சிப்பாடி, கேசவநாராயணபுரம், கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கோபாலகிருஷ்ணன், 38; 10ம் வகுப்பு வரை படித்த இவர் சொந்தமாக வேன்கள் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

இவருக்கு கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன்பு, புவனேஸ்வரி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மித்ரா, 10, என்ற மகள் உள்ளனர்.

கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி துாக்கிட்டு இறந்த நிலையில் பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்த மங்களலட்சுமி என்பவரை கடந்த, 10 மாதங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மங்கலட்சுமி கர்ப்பமடைந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த கோபாலகிருஷ்ணன் விஷ கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து மங்கலட்சுமி குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us