/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது
/
திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது
ADDED : ஜூலை 23, 2024 11:25 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே திருமணத்திற்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த திடீர்குப்பம் சிறுவாத்துாரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் தினேஷ், 22. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தினேஷ் திருமணத்திற்கு மறுத்துள்ளார். தட்டிக்கேட்ட பெண்ணை தினேஷ், அவரது தந்தை சக்திவேல், தாய் பொன்னி, சகோதரர் சுதாகர் ஆகியோர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நால்வர் மீதும் விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, தினேைஷ கைது செய்தனர்.