/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் குண்டாஸில் கைது
/
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் குண்டாஸில் கைது
UPDATED : மார் 22, 2024 12:13 PM
ADDED : மார் 22, 2024 12:13 AM

கடலுார் : வேப்பூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.ஐ., சந்தோஷ், சிறப்பு எஸ்.ஐ., ஏழுமலை அடங்கிய குழுவினர், கடந்த 9ம் தேதி வேப்பூர்-சேலம் நெடுஞ்சாலையில் பெரிய நெசலுார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த பிக் அப் லோடு வேனை நிறுத்தி சோதனை செய்ததில், 22 மூட்டைகளில், தலா 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது.
ரேஷன் அரிசி கடத்திய வேப்பூர் அடுத்த பெரிய நெசலுார் சின்னசாமி மகன் சசிக்குமார் 38; சேலம் மாவட்டம் ஆத்துார் லுார்துசாமி மகன் சாமுவேல் 39; கணேசன் மகன் ரமேஷ் 39; ஆகிய மூன்று பேரை கைது செய்து லோடு வேனில் இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சசிக்குமார் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக மேலும் இரு வழக்குகள் உள்ளன.
அதனால் இவரின் குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ், சசிக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள சசிக்குமாருக்கு வழங்கப்பட்டது.

