/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
/
கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
ADDED : மார் 05, 2025 04:56 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கஞ்சா வைத்திருந்த ஐந்து வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது, பரவளூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. மேலும் பிடிபட்ட நபர்கள், விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி ஜோசப் கணேசன் மகன் லிவிங்ஸ்டன் ஜெயராஜ், 24, பரவளூர் மணிகண்டன் மகன் ஆகாஷ் (எ) விஷ்வா, 23, வீரமணி மகன் விக்னேஷ், 26, தாமோதரன் மகன் தினேஷ், 24, செல்வம் மகன் செந்தில்நாதன், 39, என்பதும் தெரிந்தது.
அவர்களிடம் 100 கிராம் கஞ்சா, ஒரு பைக், 4 ஆயிரம் ரொக்கம், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, லிவிங்ஸ்டன் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். தப்பியோடிய விளாங்காட்டூர் கருப்பன் (எ) ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.