ADDED : ஜூலை 26, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு வெள்ளி விநாயகர் கோவிலில் மண்டலபிேஷக பூர்த்தி விழா நடந்தது.நடுவீரப்பட்டு நைனாப்பேட்டை வெள்ளி விநாயகர் கோவிலுக்கு கடந்த 2 ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடந்தது.அன்று முதல் தினமும் மண்டல அபிேஷகம் நடந்து வந்தது.
நேற்று மண்டலபிேஷக நிறைவு விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு யாகபூஜைகள் துவங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள்,அபிேஷக ஆராதனைகள் நடந்தது.10:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு 108 சங்கு அபிேஷகம் நடந்தது.பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு கலச அபிேஷகம் நடந்தது.பூஜையில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
