sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரேஷன் கார்டுகளுக்கு 1 கிலோ கூடுதல் சர்க்கரை 

/

ரேஷன் கார்டுகளுக்கு 1 கிலோ கூடுதல் சர்க்கரை 

ரேஷன் கார்டுகளுக்கு 1 கிலோ கூடுதல் சர்க்கரை 

ரேஷன் கார்டுகளுக்கு 1 கிலோ கூடுதல் சர்க்கரை 


ADDED : டிச 20, 2024 04:24 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வெள்ளம் பாதித்த கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் பெஞ்சல் புயலினால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண நிதியாக 2,000 ரூபாய் ரொக்கம், 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டது. தற்போது மேலும் ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கிலோ சர்க்கரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, மாவட்டத்தில் ஏற்கனவே அரிசி- 5 கிலோ, துவரம் பருப்பு- 1 கிலோ வழங்கப்பட்டுள்ள, கடலுார், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள 150 கிராமங்களில் 310 நியாயவிலைக் கடைகளில் உள்ள 1,95,983 குடும்ப அட்டைதாரர்களும் கூடுதலாக சர்க்கரை- 1 கிலோ பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us