/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மா.கம்யூ., சார்பில் 100 பேர் உடல் தான படிவம் ஒப்படைப்பு
/
மா.கம்யூ., சார்பில் 100 பேர் உடல் தான படிவம் ஒப்படைப்பு
மா.கம்யூ., சார்பில் 100 பேர் உடல் தான படிவம் ஒப்படைப்பு
மா.கம்யூ., சார்பில் 100 பேர் உடல் தான படிவம் ஒப்படைப்பு
ADDED : டிச 16, 2025 05:25 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், மா.கம்யூ., கட்சி சார்பில், 100 பேர் உடல் தான உறுதிமொழி படிவம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மா.கம்யூ., தலைவர் மறைந்த ராமமூர்த்தி, நினைவு தினத்தையொட்டி, சிதம்பரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உடல் தானம் படிவம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார்.
சிதம்பரம் நகர செயலாளர் ராஜா வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா பேசினர்.
அதனை தொடர்ந்து, 100 நபர்கள் உடல் தானம் வழங்குவதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவம், மருத்துவ கல்லுாரி முதல்வர் திருப்பதியிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் பரசுராமன், சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், அண்ணாமலை நகர் பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

