sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓராண்டில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் 101 பேர்! திருட்டு வழக்குகளில் ரூ.1.18 கோடி பொருட்கள் மீட்பு

/

ஓராண்டில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் 101 பேர்! திருட்டு வழக்குகளில் ரூ.1.18 கோடி பொருட்கள் மீட்பு

ஓராண்டில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் 101 பேர்! திருட்டு வழக்குகளில் ரூ.1.18 கோடி பொருட்கள் மீட்பு

ஓராண்டில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் 101 பேர்! திருட்டு வழக்குகளில் ரூ.1.18 கோடி பொருட்கள் மீட்பு


ADDED : ஜன 02, 2025 06:50 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாவட்டத்தில் கடந்த ஓராண்டில், தொடர் கொலை, கொள்ளை, சாராய கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 101 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டில், மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, எஸ்.பி, ராஜாராம் தெரிவித்துள்ளதாவது:

மாவட்டத்தில் கடந்த ஒராண்டில் கொள்ளை, வழிபறி, திருட்டு என 250 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ. 1.18 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 21 கொலை வழக்குகளில், 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 வழக்குகளில் 14 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

மேலும், போதையில் வாகனம் ஓட்டிய 5,409 பேர், மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 5,194, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்ற வாகன வழக்குகள் 236 என, 1 லட்சத்து 88 ஆயிரத்து 154 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 524 சாலை விபத்து வழக்குகளில் 561 பேர் இறந்துள்ளனர்.

மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, சாராய கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட 101 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 637 கடைகளுக்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டது. 222 லாட்டரி வழக்குகள் பதிந்து, 274 பேர் கைது செய்யப்பட்டனர். மது கடத்துவோர், மது விற்பனை செய்வோர் என, 6427 வழக்குகள் பதிந்து, 6608 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணை வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளான 2,268 நபர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1226 பழைய குற்றவாளிகள் மீது வழக்குப்பதிந்து, நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

16 போக்சோ குற்ற வழக்கில், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 16 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கற்பழிப்பு போன்ற 534 வழக்குகள் பதிந்து, குற்றவாளிகள் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு எஸ்.பி,. கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us