/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை மறியல் செய்ய முயற்சி பா.ஜ.,வினர் 102 பேர் கைது
/
சாலை மறியல் செய்ய முயற்சி பா.ஜ.,வினர் 102 பேர் கைது
சாலை மறியல் செய்ய முயற்சி பா.ஜ.,வினர் 102 பேர் கைது
சாலை மறியல் செய்ய முயற்சி பா.ஜ.,வினர் 102 பேர் கைது
ADDED : மார் 18, 2025 04:36 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற பா.ஜ., வினர் 102 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசின் டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதை கண்டித்து சென்னை எழும்பூரில் டாஸ்மாக் தலைமையகம் முன்பு தடையை மீறி முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., வினர் கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின், மறியல் போராட்டம் நடத்த முயன்ற கவுன்சிலர் சக்திவேல், நிர்வாகிகள் ஸ்ரீதர், பெருமாள், ராமமூர்த்தி, பத்மினி, மணி இந்திரஜித் உட்பட 27 பேரை புதுநகர் போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் முன், நேற்று தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமையில், பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அதைத்தொடர்ந்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் மாவட்ட தொழில் பிரிவு முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மறியல் செய்ய முயன்ற 30பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் மறியல் செய்ய முயன்ற 14 பெண்கள் உட்பட 106 பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்து, பின் விடுவித்தனர்.