தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 103 வயது முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

 103 வயது முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

 103 வயது முதியவரின் உடல் உறுப்புகள் தானம்


ADDED : மார் 04, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

கடலுார் அருகே உயிரிழந்த 103 வயது முதியவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டன.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் துரைராஜ், 103; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.

இவர், தான் இறந்த பின் உடலை, மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு தானமாக வழங்க வேண்டும் என, குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று உடல்நலக் குறைவால் துரைராஜ் உயிரிழந்தார்.

அவரது கண் மற்றும் உடலை தானமாக வழங்குவதாக மகள் பத்மினி, மருமகன் வெங்கடேசன், பேரன் தேவராஜன், பேத்தி சுதா ஆகியோர் அரிமா சங்கத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, துரைராஜ் கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கும், உடல் மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us