தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 10ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி 

 10ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி 

 10ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி 


ADDED : ஏப் 17, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

கடலுார் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசால் நடத்தப்பட்ட சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.

அதில் கடலுார் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளியிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வெழுதிய, 47 பேரும் தேர்ச்சி பெற்று, 100

சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.

10ம் வகுப்பில் மாணவர் ஆதில் அகமது 500க்கு 481 மதிப்பெண் பெற்று முதலிடம், காவியன் 461 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், கிரிதரன் 460 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாக இயக்குனர் அமுதவல்லி ரங்கநாதன், பள்ளி முதல்வர் சுதா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us