ADDED : மார் 16, 2026 03:18 AM
கடலுார்: கடலுாரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 110 காஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அமெரி்க்கா-ஈரான் போர் காரணமாக இந்தியாவில் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கிடையே, கடலுார் முதுநகரில் உள்ள குடோனில் வணிக சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வழங்கல் துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்பேரி்ல், கடலுார் வட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்ரமணியன், குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தனியார் காஸ் ஏஜன்சி நிறுவனம், அனுமதியின்றி காஸ் நிரப்பப்பட்டிருந்த 47 சிலிண்டர்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. மேலும், 63 காலி சிலிண்டர்கள் இருப்பதும் தெரிந்தது. உடன், அதிகாரிகள் காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
