ADDED : செப் 29, 2024 06:10 AM
கடலுார், : கடலுாரில், லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
கும்பகோணம் கோட்ட அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்றது. கடலுார் முதுநகர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு அருகே சென்றபோது, முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீர் பிரேக் அடித்துள்ளார். இதனால் அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
கடலுார் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சென்னை திநகர் நவஜோதி 64; சுஜாதா 15; கூடுவாஞ்சேரி ஈஸ்வரி 65; காரைக்கால் கார்த்தி 34; மாதவரம் ஆண்டாள் 60; வண்ணாரப்பேட்டை செல்வம் 64 உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.