தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கதண்டு கொட்டியதில் 12 தொழிலாளர்கள் ‘அட்மிட்’

கதண்டு கொட்டியதில் 12 தொழிலாளர்கள் ‘அட்மிட்’

கதண்டு கொட்டியதில் 12 தொழிலாளர்கள் ‘அட்மிட்’


UPDATED : அக் 14, 2026 07:34 PM

ADDED : அக் 14, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:34 PM ADDED : அக் 14, 2026 07:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கதண்டு கொட்டியதில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம், மாளிகைமேடு காளியம்மன் கோவில் அருகில் உள்ள வாய்க்காலில் நேற்று காலை 11:00 மணியளவில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது கதண்டு வண்டு கூட்டமாக பறந்து வந்து அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களை கொட்டியது. வலியால் துடித்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அவர்களை, கதண்டு வண்டு விரட்டி சென்ற கொட்டின.

அதில், அதே கிராமத்தை சேர்ந்த அலமேலு,50; மன்னம்மாள்,45; கன்னியம்மா,70; செல்வி,36; பூரணி,40; சிவகலா,35; சுகந்தி,38; கவுசல்யா,43;நீலா,50; செல்வம்,73; அன்னம்,60; கங்கா,60; ஆகிய 12 பேர் பாதிக்பட்டு வலியால் துடித்தனர்.

அவர்களை, சக தொழிலாளர்கள் காப்பாற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us