/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ் பேரவையின் 129வது இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி
/
தமிழ் பேரவையின் 129வது இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி
தமிழ் பேரவையின் 129வது இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி
தமிழ் பேரவையின் 129வது இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஜன 08, 2024 05:45 AM
புவனகிரி: புவனகிரி தமிழ்ப்பேரவையின் சார்பில் 129 வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி தமிழ்ப் பேரவையின் சார்பில் மாதம் தோறும் இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மொழி நடை மற்றும் ஒலி, ஒளி வேறுபாடு உள்ளிட்ட தன்மைகளை கற்றுக்கொள்கின்றனர். நேற்று பேரவை யின் 129வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி பாரதி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. பேரவைத் தலை வர் வழக்கறிஞர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.
செயலாளர் அன்பழகன் வரவேற்றார். சங்க இலயக்கிய அமுதம் பகுதியில் அகநானுறில் 22 வது பாடலான 'அணங்குடை நெடுவரை' எனத்தொடங்கும் பாடல் குறித்து பேராசிரியர் பாண்டுரங்கன், திருவாசக அமுதத்தில், 'இடக் கும் கருமுருட்டு' எனத் தொடங்கும் 8 வது பாடல் குறித்து முனைவர் அன்பழகன் விளக்கிப் பேசினர். பொருளாளர் ஜெகன் நன்றி கூறினார்.