/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு 13,890 பேர் பங்கேற்பு
/
ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு 13,890 பேர் பங்கேற்பு
ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு 13,890 பேர் பங்கேற்பு
ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு 13,890 பேர் பங்கேற்பு
ADDED : நவ 17, 2025 01:51 AM
கடலுார்: ஆசிரியர் தகுதிக்கான 2ம் தாள் தேர்வை 13,890 பேர் எழுதினர்.
மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாளை 12 மையங்களில் 4,191 தேர்வர்கள், இரண்டாம் தாள் தேர்வை, 53 மையங்களில் 15,717 பேர் என, மொத்தம் 65 தேர்வு மையங்களில் 19,908 தேர்வர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. நேற்று முன்தினம் நடந்த முதல் தாள் தேர்வை 4,191 பேரில் 3,635 பேர் தேர்வு எழுதினர். 556 பேர் தேர்வு எழுதவில்லை.
நேற்று இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இதில், 15,717 பேரில் 13,890 பேர் தேர்வு எழுதினர். 1,827 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.