/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பல்கலை.,யில் 2ம் நாள் கபடி போட்டி 15 கல்லுாரி அணிகள் பங்கேற்பு
/
பல்கலை.,யில் 2ம் நாள் கபடி போட்டி 15 கல்லுாரி அணிகள் பங்கேற்பு
பல்கலை.,யில் 2ம் நாள் கபடி போட்டி 15 கல்லுாரி அணிகள் பங்கேற்பு
பல்கலை.,யில் 2ம் நாள் கபடி போட்டி 15 கல்லுாரி அணிகள் பங்கேற்பு
ADDED : அக் 20, 2024 06:48 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், நேற்று இரண்டாம் நாளாக நடந்த கபடி போட்டியில், 15 கல்லுாரிகளை சேர்ந்த மாணவியர் அணியினர் பங்கேற்றனர்.
காட்டுமன்னார்கோவில் அரசு கலைக்கல்லூரி சார்பில், அண்ணாமலை பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி விளையாட்டு போட்டிகள் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
2ம் நாளான நேற்று, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 15 கல்லூரிகளில் இருந்து மாணவியர் அணியினர் பங்கேற்றனர்.
போட்டி துவக்க நிகழ்ச்சியில் போட்டி ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் போட்டிகளை துவக்கி வைத்தார்.
உடற்கல்வி துறை இணை இயக்குநர் வெங்கடாஜலபதி, துறை தலைவர்கள் சிற்றரசு, நடராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜமாணிக்கம், இளவரசி உதவி பேராசிரியர் சேவி, தொழில்நுட்ப கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முருகேசன உட்பட பலர் பங்கேற்றனர்.
இரு தினங்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், இன்று நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனர்.
இதில் வெற்றி பெறும் அணியினர், தென் மண்டல பல்கலைக்கழககளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.